Connect with us

மீண்டும் ஊரடங்கா? முதல்வர் முக்கிய ஆலோசனை!

Tamil Nadu

மீண்டும் ஊரடங்கா? முதல்வர் முக்கிய ஆலோசனை!

b421492acfa132d737b6283f1ce9a674

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசும் படிப்படியாக தளவுகளை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் 

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதன்பின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் ஆகியவை குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இம்முறை கோவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கிடைக்கும் என்றும் அதே போல் பார்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் இப்போதைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தான் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top