கொட்டும் மழையில் எழிலகம் விரைந்த முதல்வர்; ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

மாண்டஸ் புயல் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க கூடிய நிலையில் கொட்டும் மழையிலும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்டஸ் புயல் கரையை நோக்கி நெருங்கி கொண்டிருக்க கூடிய நிலையில்
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேரடியாக அவசர கால மையத்துடைய செயல்பாட்டை ஆய்வு செய்தார்.  வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன்,மற்றும் துறை அதிகாரிகள் முதலமைச்சருக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மாவட்டம் வாரியாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள்டம் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மாமல்லபுரத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிடம் பேசிய முதலமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.