குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; பேரவையில் சாட்டையை சுழற்றிய முதல்வர்!

குடிநீரில் மலம் கலந்தது தொடர்பாக உண்மை குற்றவாளிகள் விரைவில் கைது செய்வார்கள் எனவும் 7.5லட்சம் செலவில் புதிய குடி நீர் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் உரையாற்றியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் சமூக நீதி அனைவருக்கும் சம்மான வாய்ப்பை உருவாக்கினால் தான் நம்மால் சமூக நீதி அடைய முடியும் எனத் தெரிவித்த அவர், மாமேதை அம்பேத்கர் பிறந்த மண்ணில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நிகழ்வு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

குடி தண்ணீரில் மலம் கலந்த தகவல் கிடைத்தவுடன் சுகாதாரமான குடி நீர் மருத்துவம் வழங்க உத்தரவிட்டேன் அங்கு மருத்துவர்களை கொண்டு தண்ணீரை ஆய்வு செய்ய சொன்னதில் அடிப்படையில் அந்த தண்ணீரில் மனித மலம் கலந்துள்ளது தெரிய வந்தது.

இதனையொட்டி அந்த தொட்டி குடி நீர் குழாய் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி நீக்கப்பட்டுள்ளது என ஆய்வில் தகவல் வந்த பிறகு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், 10 பேர் கொண்ட மருத்துவ பணியாளர்கள் குழு முகாமிட்டு மக்களுக்கு நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூ. 2 லட்சம் செலவில் புதிய குடி நீர் குழாய்கள் அமைத்து குடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடி நீர் தொட்டி அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது 70 நபர்களிடம் இதுவரை விசாரணை மேற்கொண்டு வருகிறது விரைவில் உண்மை குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தாலும் சாதி தீண்டாமை இன்னும் இருக்கும் மதம் உண்னை மிருகமாக்கும் சாதி உன்னை சாக்கடையாக்கும் என பெரியார் தெரிவித்தது போல் சாதி மத பேதம் கலையப்பட வேண்டும் எனவும் இதுபோன்ற கீழ் தரமான செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.