#Breaking ஈஷா யோகாவிற்கு செக்; சுபஸ்ரீ மரண வழக்கில் முதல்வர் அதிரடி!

ஈஷாயோகா மையத்தில் மர்மமான முறையில் உயிர் இழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் உரிய உரிய விசாரணை நடந்து வருகிறது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ, கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி பயிற்சி மேற்கொள்ள ஈஷா யோகா மையம் சென்றிருந்தார். பயறிசி முடிந்த பின்னர் அவரது கணவர் அழைத்து செல்ல வந்தபோது காணாமல் போனார். இதைத்தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதி செம்பேடு பகுதியில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா தொடர்பாக ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை ஈஷா யோகா மையம் சென்ற சுபஸ்ரீ மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.

சுபஸ்ரீ பிரேதம் மீட்கப்பட்டு 3 மருத்துவர் கொண்டு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

விரைவில் உண்மை என்ன என்பது தெரிய வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.