Entertainment
கொள்ளையர்களை விரட்டிய தம்பதிக்கு 2 லட்சத்துடன் கூடிய தங்கப்பதக்கம் முதல்வர் வழங்கினார்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே பண்ணை வீட்டில் வசித்து வருபவர் சண்முகவேல், மற்றும் செந்தாமரை. இவர்கள் பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்க்கின்றனர்.

இவர்களின் தனிமையை நோட்டமிட்ட முகமூடி கொள்ளையர்கள் இருவர் இவர்களிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்து சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்க உள்ளே இருந்து ஓடி வந்த அவர்களின் மனைவி கொள்ளையர்களை கையில் கிடைத்த பொருட்களை வைத்து விரட்ட உடன் சண்முகவேலுவும் விரட்ட அரிவாள் வைத்திருந்த கொள்ளையர்கள் பயந்து ஓடிவிட்டனர்.
சிசி டிவியில் கேமராவில் பதிவான இந்த காட்சியை வைத்து நெல்லை எஸ்.பி முதல் அமிதாப்பச்சன் வரை பாராட்டி விட்டனர்.
இவர்களுக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்க தமிழக அரசு முடிவெடுத்து இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு முதல்வர் எடப்பாடி அவர்கள் விருது வழங்கினார்.
விருதும் தங்கப்பதக்கமும் 2லட்சமும் பரிசாக பெற்றனர்.
