Connect with us

40 சதவீத கமிஷன்.. ஆதாரம் எங்கே? – காங்கிரசுக்கு சவால் விடுத்த முதல்வர்!!

பசவராஜ் பொம்மை

செய்திகள்

40 சதவீத கமிஷன்.. ஆதாரம் எங்கே? – காங்கிரசுக்கு சவால் விடுத்த முதல்வர்!!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் பாஜக அரசானது பல்வேறு திட்டங்களில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக திட்டங்களை செயல்படுத்துவதில் ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

இத்தகைய சம்பவமானது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தொண்டர்கள் (40percentsarkara.com) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை கிளப்பியது.

அதில் பேடிஎம் ஸ்கேனர் போன்ற ‘பே சிஎம்’ எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன், வடிவமைத்து பாஜவை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரசாரத்தால் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எந்த குற்றச்சாட்டும் உண்மை இல்லை எனவும், அவர்கள் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

அதோடு இத்தகைய போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆதாரங்களைத் தரும்படி அவர்களுக்கு சவால் விடுத்துள்ளதாக கூறினார். அதோடு QR குறியீடு போஸ்டர் என்பது ஒரு தீய வடிவமைப்பு என கூறிய அவர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top