Connect with us

இது என்ன நியாயம்? உடனடியாக டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுக!: ஈபிஎஸ் அறிக்கை;

tasmac 236

செய்திகள்

இது என்ன நியாயம்? உடனடியாக டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுக!: ஈபிஎஸ் அறிக்கை;

இது என்ன நியாயம்? உடனடியாக டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுக!: ஈபிஎஸ் அறிக்கை;

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் இன்றளவும் திறந்து கொண்டு தான் உள்ளது, இது குறித்து சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுபான கடைகளை மூடுக என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

palaniswai

அதில் தமிழகத்தில் கொரோனா பரவலின்அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம் கொரோனா அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை திமுக வெளியிட்டு வருகிறது என்று கூறினார்.

ஆனால் திமுக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் ராக்கெட் வேகத்தில் கொரோனா பரவுவதாக ஊடகங்கள் மத்தியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பொங்கல் விடுமுறைக்கு பின்பு நோய் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் தமிழகத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதாக திமுக அரசை செய்தி குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால் உண்மையில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாதிப்புகள் சமூக வலைதளங்கள், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.

தேர்தல் அறிவித்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு தொற்றால் சுமார் 500 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775 ஆக இருந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மதுபான கடைகளை திறந்து இருப்பதால் தொற்று பரவுகிறது என்று பிரச்சாரத்தை முன்னெடுத்தார் என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆனால் இன்றோ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைப்பது என்ன நியாயம்? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கேட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top