முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு: அரசாணை வெளியீடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்க முதல்வர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா இன்போசிஸ் தலைவர் நந்தன், நிலகேனி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். இக்குழுவில் காலநிலை மாற்ற நிர்வாக குழு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமணசந்திரன் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.

மேலும், ஐ.நா.சுற்றுசூழல் திட்ட செயல் இயக்குனரான நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம் குழுவில் நியமனம் செய்துள்ளனர். அதோடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவானது 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment