பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;

நம் தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டன.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்த நிலையில் நம் தமிழகத்தில் தற்போது வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழகத்தின் தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில முக்கிய விளக்கங்களை கூறியுள்ளார்.

அதன்படி பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இந்த சுழற்சி முறை வகுப்புகள் இல்லை. பொதுத் தேர்வு என்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினம்தோறும் பள்ளிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறைந்ததும் மாணவர்களுக்கும் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் புதிதாக 5.80 இலட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment