முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்போது?

அனைத்து வகை கல்லூரிகளுக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் அறிவித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பது தெரிந்ததே

medical studentsஇந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அக்டோபர் 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment