12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம்: தமிழ் பயிற்றுமொழி மாணவர்களுக்கு கட்டண விலக்கு!

நம் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்து அவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக மாணவர்கள் அயராது படிப்பார்கள். ஏனென்றால் 10ஆம் வகுப்பு படித்து முடித்த பின்னர் மேல்நிலை படிப்புக்காக பிரிவினை தேர்வு செய்வது, அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

12ம் வகுப்பிற்கு பின்னர் கல்லூரிக்கு செல்ல மாணவர்கள் தயாராக இருப்பதால் அவர்கள் சரியான கல்லூரியை தேர்வு செய்வதற்கு கடினமாக படிப்பார்கள். இந்த நிலையில் தமிழ் பயிற்றுமொழி மாணவர்களுக்கு சில முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி 2021-22 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை வசூலித்து அதை ஆன்லைனில் கட்டுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த தேர்வு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

செய்முறை கொண்ட பாடங்கள் பயில்வோருக்கு தேர்வு கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் 20 ரூபாயும், சேவை கட்டணத்திற்கு ஐந்து ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூபாய் 225 என்று குறிப்பிட்டுள்ளது.

செய்முறை இல்லாத பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 175 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கு இத்தகைய விலக்கு  செல்லும் என்று கூறியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் MBC, SC மற்றும் ST மாணவர்களுக்கு இத்தகைய விலக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment