Connect with us

பெண் கல்வியை ஊக்குவிக்க காலை நேரத்தில் மாணவிகளுக்கு வகுப்பு ..?

College students Affordable

தமிழகம்

பெண் கல்வியை ஊக்குவிக்க காலை நேரத்தில் மாணவிகளுக்கு வகுப்பு ..?

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் காலை நேரவகுப்புகள் பெண்களுக்கும் மாலை நேரவகுப்புகள் ஆண்களுக்கும்  நடத்த அரசு பரிசீலிப்பதாக சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தனது தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளில் அரசு கல்லூரி அமைக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் காலை நேர வகுப்புகள் பெண்களுக்கும் மாலை நேர வகுப்புகள் ஆண்களுக்கு என்று மாற்றலாமா ? என அரசு பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top