தமிழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 94.03 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கிடையில் 2021-2022 கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 93.76 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38 ஆக உள்ளது, 4.05 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 சதவீதமாக உள்ளது, சுமார் 3.49 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், அதிகபட்சமாக முதலிடத்தில் விருதுநகர் 97.85 சதவீத தேர்ச்சியும், திருப்பூர் 97.79 சதவீதமும், மூன்றாவது இடத்தை பெரம்பலூர் 97.59 சதவீதமும் பெற்றுள்ளது.
இந்த தேர்வில் பதிவு செய்த திருநங்கை ஒருவர் போர்டு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாநில கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு: மத்திய சுகாதார துறை முடிவு
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.