12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்களிடம் இருந்து கருத்துகள் வந்த நிலையில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இந்த இணைப்பில் தேடலாம் – http://tnresults.nic.in , http://dge1.tn.nic.in

மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற, ஹால் டிக்கெட் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

இது தவிர, மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள தேசிய தகவல் மையக் கிளை அலுவலகம் அல்லது நூலகத்தை இலவசமாக அணுகுவதன் மூலம் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

12ஆம் வகுப்பு பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு முடிந்தவுடன் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

ரூ.10 கோடி தங்கத்தை கடத்திய 18 பெண்கள்.. மர்ம உறுப்பில் மறைத்து வைத்திருந்ததாக தகவல்..!

தற்போழுது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியில் இருந்து மே 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.