12 ஆம் வகுப்பு தேர்வு தாள் திருத்தங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கம்!

12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று மாநிலம் முழுவதும் இறுதித் தேர்வில் கலந்து கொண்டனர்.12 ஆம் வகுப்பு அனைத்து பிரிவு மாணவர்கள் கடைசித் தேர்வை இன்று எழுதி முடித்துள்ளனர்.

தேர்வுகளுக்கான திருத்தம் செயல்முறை ஏப்ரல் 10 முதல் தொடங்க உள்ளது மற்றும் மே 5 ஆம் தேதி அரசு தேர்வு இயக்குநரகம் (டிஜிஇ) முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல் கிடைத்துள்ளது .

தமிழகம் முழுவதும் 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.

முதல் நாள் தேர்வில் 50,674 மாணவர்கள் மொழித் தாள் Iக்கு வரவில்லை எனப் புகார் எழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கோவிட் பரவல் – காரைக்கால் மாஸ்க் அணிவது கட்டாயம்!

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 சதவீத மாணவர்கள் வாரியத் தேர்வுக்கு வரவில்லை எனத் தெரிவிப்பது வழக்கம் என்று தெளிவுபடுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.