Connect with us

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Nadu

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

551014587555870816a187113b1dbfb0

12ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதை அடுத்து மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த தேர்வில் மறு மதிப்பீடு செய்வதற்கும் தனித்தேர்வர்களுக்கும் தேர்வுகள் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியாகவுள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று தணிந்தது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் விடைத்தாள் நகல் எடுக்க விரும்பும் மாணவர்கள் ஒரு பாடத்துக்கு 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதேபோல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 205 ரூபாய் என்றும் உயிரியல் பாடத்தில் மட்டும் 305 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top