11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் கைது!!!

நம் தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே 11-ம் வகுப்பு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனை மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் 43 வயதான பாலச்சந்திரன் மற்றும் 46 வயதான ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment