திருவள்ளூரில் மீனவர்களிடையே மோதல்: 4 பேர் காயம்!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டி குப்பம் பகுதியில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களுக்கு இடையே மீன் பிடிப்பதில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரசம் பேச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அப்போது ஒரு தரப்பி மீனவர்கள் கலந்து கொண்ட நிலையில், மற்றொரு தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அதிர்ச்சி! கட்டுப்பாட்டை இழந்த கார்… பெண் ஐடி ஊழியர் பலி!!

இந்நிலையில் வழக்கம் போல் இன்றைய தினத்திலும் மீனவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது 2 வீடுகள் அடுத்து நொறுக்கி சூறையாடப்பட்டனர். அதே போல் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என் சொத்து விபரத்தை காட்ட தயார்.. ஒரு பைசா அதிகம் இருந்தாலும் அரசு எடுத்து கொள்ளலாம்: அண்ணாமலை

இதனிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதோடு வருவாய்த்துறை மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.