தமிழகத்தில் நகரும் கூட்டுறவு வங்கி சேவை? சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகை உயர்வு!!
நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. அதிலும் குறிப்பாக நேற்று இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் ஆனது ரூபாய் 281 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மேம்படுத்தப்படும் என்றும் அதற்கு பல்வேறு விதமான அறிவிப்புகளும் நேற்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சுய உதவி குழுக்கள் கடன் தொகையை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டுறவு வங்கிகளில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூபாய் 12 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எந்த ஒரு மாநில அரசும் செய்யாத வகையில் தமிழகத்தில் நகரும் கூட்டுறவு வங்கி சேவை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சங்கராபரணி அறிவித்தார்.
