கடை அருகே மது அருந்திய சிஐடியு அமைப்பினர்: தட்டிக் கேட்டதால் பயங்கரம்!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் ஷான். இவரது கடையின் முன்பு சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனால் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தனது கடையில் வேலைப்பார்க்கும் ஊழியர்களிடம் அவர்கள் வேறு இடத்திற்கு சென்று மது அருந்து மாறு கூறியுள்ளார். அதன் படி, தெரிவிக்கையில் அவர்களுக்கும் கடை பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

19 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு.. போலீசார் கொடுத்த அறிக்கையால் பரபரப்பு!!

இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே கடைக்கு நேரடியாக வந்து ஷானிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் மோதலாக மாறவே ஷானின் சட்டையை கிழித்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.

உடனடியாக சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுப்பட்ட 12 பேரும் சிஐடியு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

ரேஷனில் 10 கிலோ கியாஸ் சிலிண்டர்; எப்போது தெரியுமா?

இவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது சம்பவம் குறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.