உருவாகிறது ‘சிட்ரங் புயல்’: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைச்சி வளைச்சி ஆபாச வீடியோ!! திருச்சியில் இளைஞர் கைது..!!

இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி வாக்கில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் புயல் உருவான பிறகு அது பயணிக்கும் திசையை பொறுத்தே வலுபெறுமா? எந்த இடத்தில் கரையை கடக்கும் போன்ற தகவல்களை கணிக்க இயலும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

மேலும், சிட்ரங் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆகிய இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment