
Entertainment
விஜய்யுடன் இணையும் சிறுத்தை சிவா! ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!
விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கிவருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக வருவதாகவும் தகவல் கிடைத்து வருகிறது. அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பத தகவல் உறுதியாகியுள்ளது.அதற்கு அடுத்து அட்லீயுடன் இணையயுள்ளார்.
கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா, அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட 4 படங்களை இயக்கி பிரபலமானார்.வெற்றி படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சிவா.
இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் விஜய் இடையே சந்திப்பு நடந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது இருவரும் பல விஷயங்களை பேசியதாகவும், சந்திப்பின் இறுதியில், தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு சிவாவிடம் விஜய் தெரிவித்ததாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளது.
விஜய் படத்தை இயக்கபோவதாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டில் இருந்தே நடந்து வருவதாக சிவா தெரிவித்திருந்தார். இணையத்தில் வைரல் ஆகிவரும் இந்தத் தகவல் உறுதியானால் விஜய்யின் 68ஆவது படத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வில்லனாகும் விஜய் சேதுபதி! அடுத்தது யார் படத்தில் தெரியுமா?
அவர்கள் இணையும் படம் வரலாற்று சம்பந்தப்பட்ட படமாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
