Connect with us

மாஸ்க் போடலைன்னா ஆபிஸை விட்டு வெளியே அனுப்புங்க.. தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை!

Untitled 67

செய்திகள்

மாஸ்க் போடலைன்னா ஆபிஸை விட்டு வெளியே அனுப்புங்க.. தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை!

மாஸ்க் போடலைன்னா ஆபிஸை விட்டு வெளியே அனுப்புங்க.. தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை!

கொரோனாத் தொற்றின் முதல் இரண்டு அலைகளில் பெரும் பாதிப்பினை சந்தித்த நிலையில் மூன்றாவது அலையினை பெரும் விழிப்புணர்வுடன் எதிர்கொள்கின்றது தமிழக அரசு.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் எனப் பலவற்றினைச் செயல்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது அலுவலகங்களுக்குச் செல்வோர் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு சில நெறிமுறைகளை வகுத்து அதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அலுவலகங்களுக்கு பணிக்கு வருவோர் ஒவ்வொரு நாள் காலையிலும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கடந்த ஒரு வார காலத்தில் கொரோனாத் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும்.

முகம் மற்றும் மூக்கினை மூடியபடி மாஸ்க் அணியாமல் அலுவலகங்களில் யாரேனும் பணி புரிந்தால் அலுவலகத்தைவிட்டு உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும்.

மேலும் இரண்டு அடிகள் இடைவெளியில் நாற்காலிகள் போட்டு பணியினைச் செய்தல் வேண்டும். 300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரர் ஒருவர் கட்டாயம் கண்காணிப்பிற்காக நியமிக்க வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் வைத்து இருத்தல் வேண்டும். பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பது கட்டாயம்.

கேண்டீன்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதப் பேர் மட்டுமே உணவருந்த வேண்டும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top