Connect with us

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: தொண்டர்கள் அதிர்ச்சி

News

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: தொண்டர்கள் அதிர்ச்சி

2e2aa3debedae20d85998681f2517a15

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை சீராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது

இதனையடுத்து அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய போதிலும் சற்று முன் அவர் காலமானார் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

70 வயதான வசந்தகுமார் கடந்த 1970களில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தவர். பின்னர் வசந்த அன் கோ என்ற கடையை சிறிய அளவில் ஆரம்பித்து இன்று தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட ஒரு பெரிய நிறுவனமாக தனது உழைப்பால் உயர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மறைந்த எம்பி வசந்தகுமார் அவர்களுக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top