Entertainment
கீர்த்தி சுரேஷின் ‘எஸ்’ செண்டிமெண்ட் சக்சஸ் ஆகுமா?
விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்திசுரேஷ் அதன்பின்னர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் முன்னணி நடிகையாக மாறினார். அதன் பின்னர் விஜய்யுடன் ‘பைரவா’, சர்கார்’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமுடன் ‘சாமி 2’ , விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’ என பிசியான நடிகையாகி நம்பர் ஒன் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சர்கார்’, ‘சாமி 2’, ‘சண்டக்கோழி’ மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘சீமராஜா’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நான்கு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை நான்குமே ‘எஸ்’ என்ற எழுத்தில் ஆரம்பமாகுவது தான். இந்த நான்கு படங்களும் வெற்றியடைந்தால் நயன்தாராவுக்கு போட்டியாக வந்துவிடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
தமிழை போலவே தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் வெகுவிரைவில் அவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகை லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
