எழுத்தாளர் சங்கத்தலைவர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா

 

853483b56b42153597f16e81375bd0c9

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட்டவர் என்ற விமர்சனத்தை பெற்றவர் கே.பாக்யராஜ். அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக பதவியேற்ற 6 மாதத்திலேயே அவர் பதவி விலகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment