Entertainment
அசுரன்’ கெட்டப்பிற்கு மாறிய தனுஷ்

தனுஷ் நடித்த ‘வடசென்னை’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது அவர் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான கெட்டப்பில் மாறியுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்த ஆச்சரியமான அறிவிப்பு ஒன்று விரைவில் வெளிவரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது
