Entertainment
ஜல்லிக்கட்டின் சிறப்பை உணர்த்திய படம்
பொங்கல் என்றாலே அனைவருடனும் கொண்டாடும் பண்டிகை. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு கரும்பு கடித்து மகிழும் பண்டிகை.

பொங்கல் பண்டிகை முடிந்த அடுத்த நாள் வீட்டு தெய்வமாக வணங்கும் பசுவையும் உழவர்களின் தோழனான காளையையும் அலங்கரித்து வழிபடும் உற்சாக திருவிழா.
அத்தோடு கிராமத்தில் கலக்கலாக ரேக்ளா ரேஸ், மற்றும் ஜல்லிக்கட்டு முக்கிய இடம்பெறும். தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றி விட்ட இந்த ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் ப்ளாக் அண்ட் ஒயிட் கால படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ரஜினிகாந்த் நடித்து 1980ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்துக்கு பின்னரே சரளமான தமிழ் படங்களில் வீர விளையாட்டாக காட்சிப்படுத்தப்பட்டது.
இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த இந்த படம் அலங்காநல்லூர், மற்றும் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மற்றொரு ஊரான சிவகங்கை சிராவயல், பாகனேரி பகுதிகளில் இப்படம் எடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை சிறப்பாக காண்பித்த வகையிலும் அதன் பிறகு வரும் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலும் மிக அரியதொரு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
பின்னாட்களில் கமல் நடித்த விருமாண்டி படத்திலும் ஜல்லிக்கட்டு மிக விரிவாக காண்பிக்கப்பட்டது. கமல் எதை செய்தாலும் ஒரிஜினாலிட்டி தன்மையுடன் செய்பவர்.
ஜல்லிக்கட்டை மிக விரிவாக இப்படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார். வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடி வருவதில் ஆரம்பித்து அழகிய முறையில் காட்சிப்படுத்தி இருப்பார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கேசவ் பிரகாஷ்.
