Entertainment
சூர்யாவின் மேலதிகாரியாக மாறும் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும் , பிரதமரை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்து வருகின்றனர் . இந்த நிலையில் சமுத்திரக்கனியும் இந்த படத்தில் பிரதமரை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரியாக நடித்து வருகிறார் என்றும், இவர் சூர்யாவின் மேலதிகாரியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை காப்பாற்றும் பணியில் சூர்யாவும் , சமுத்திரக்கனியும் இணைந்து ஈடுபடுவதாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சாயிஷா, ஆர்யா, உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
