Entertainment
அடுத்த கட்டத்திற்கு சென்றது யோகிபாபுவின் ஜோம்பி

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நகைச்சுவை நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் யோகிபாபு . தளபதி விஜய் , தல அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் . தளபதி 63 படத்திற்கு யோகி பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ள ‘ஜோம்’பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்றைய படப்பிடிப்புக்கு வந்த யோகிபாபுவை தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.
இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்பதும், இந்த படத்தை புவன் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
