Connect with us

என்.ஜி.கே. டீஸர் தேதி அறிவிப்பு !

Entertainment

என்.ஜி.கே. டீஸர் தேதி அறிவிப்பு !


5441364cfeaf94bf10ed96e01488ff33

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் , பின்னணி இசை உள்பட மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது . இந்த படத்தின் டீஸர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் சூர்யா , சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் சிங் , பாலா சிங்க் , மன்சூர் அலிகான் , முரளி சர்மா, சம்பத் ராஜ் , சரத் குமார் , ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவாளராகவும் , பிரவீன் படத்தொகுப்பாளராகவும் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top