Connect with us

அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு எப்போது ?

பொழுதுபோக்கு

அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு எப்போது ?

761d6342b50957dba78fb1d01bf70d54

எஸ்.ஜே.சூர்யா மற்றும் நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதல்’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் தற்போது ‘உயர்ந்த மனிதன்’ என்னும் படத்தை இயக்கவுள்ளார் . இந்த படத்தில் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்த அமிதாப்பச்சன் தற்போது முதல் முதலாக தமிழில் ஒரு படம் நடிக்க உள்ளார் . மேலும் அந்த படத்திற்கு 40 நாள் கால் சீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top