உலக வானொலி தினம் இன்று- சிறப்பு பதிவு

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 13 வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது. வானொலி பற்றி ஒரு பார்வை.

1174a80ec8935e4e81d208acda372367

ஒரு காலத்தில் திரைப்பாடல்கள் கேட்பதற்கு முக்கிய கருவியாக விளங்கியது வானொலி 90களின் இறுதி வரை மிக பெருங்குரலெடுத்து ஓங்கி ஒலித்து சுருதி கொஞ்சம் அடங்கிய வானொலி பெட்டி இன்று பெட்டிக்குள் முடங்கி போனது.

அந்த காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மின்சார வசதி கிடையாது. டிவியே வராத முதல் நாள் பேப்பரை மறுநாள் படிக்கும் ஐம்பதுகளின் காலகட்டம். எம்.எஸ்.வி, கேவி மகாதேவனின் பாடல்கள் ஒலித்த 60, 70களின் காலகட்டம்.

70களுக்கு பிறகு வந்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அடங்கிய காலகட்டம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது வானொலி.

சொல்லப்போனால் வயசுப்பையன் எவ்வளவு துறுதுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பானோ அந்த அளவு உச்சத்தில் வானொலி இருந்த காலகட்டங்கள் அவை.

ஆஹாசவாணி செய்தி அறிக்கை வாசிப்பது சரோஜ் நாராயணசாமி, பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் டில்லியில் இன்று சுட்டு கொல்லப்பட்டார் என திடீர் வானொலி அதிர்ச்சி செய்தியை கேட்டு கண்கலங்கிய நபர்கள் எத்தனை எத்தனை பேரோ.

ஒரளவு சுமாரான வசதியுள்ள நபர்கள் வீட்டில் மட்டுமே எண்பதுகள் வரை ரேடியோ பெட்டி இருந்தது. ஒரு வீட்டில் நியூஸ் கேட்பதற்காகவும் பாடல் கேட்பதற்காகவும் ஊரே கூடியிருந்த 1960களின் காலகட்டம் தற்போதைய ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பில் அத்தனை பாடல்களையும் டவுன்லோட் செய்யும் தலைமுறைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

செய்தியையும் பாடலையும் காத்திருந்து கேட்ட அந்த தருணங்கள் அழகானவை. இலங்கை வானொலி தமிழில் பலரை வானொலி கேட்க வைத்த பெருமைக்குரியது. கே.எஸ் ராஜா, அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம் என எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டமான அறிவிப்பாளர்கள்.

எத்தனை எத்தனை அரிதான பாடல்களை இலங்கை வானொலி ஒளிபரப்பி இருக்கிறது.

இன்னும் சற்று நேரத்தில் ஆங்கில செய்திகள் டெல்லியில் இருந்து அஞ்சலாகும் என்ற அறிவிப்புகள், எப்போதாவது வரும் முழு தமிழ் திரைப்படத்தின் எடிட் செய்து சுருக்கப்பட்ட ஒலிச்சித்திரம் போன்றவை மக்களை பரவச நிலையில் வைத்திருந்தவை.

2000ங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் அனைவரையும் இன்று வரை வானொலி கேட்க வைத்தும் வானொலிக்குரிய அக்கால மெருகு குலையாமலும் நிகழ்ச்சிகளை இன்று வரை ஒலிபரப்பி கொண்டிருப்பது கோடை வானொலி மட்டுமே. இது பண்பலையாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சென்றடைகிறது. நல்ல தொரு ரசனையுடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

மற்றபடி சென்னை, கோவை, திருச்சி, போன்ற பெருநகரங்களில் ஒளிபரப்பாகி வரும் தனியார் பண்பலை வானொலி நிலையங்கள் மணக்க மணக்க மல்லிகைப்பூ இட்லி கேட்பவனிடம் இல்லை பாஸ்டா நூடுல்ஸ்தான் இருக்கு இத சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கோங்கன்னு சொல்றது மாதிரி நம் காதுகளை நிரப்புபவை.

ரேடியோவின் காலம் மலையேறி போய் விட்டாலும். இன்னும் ரேடியோவின் காதலர்கள் மிச்சமிருப்பதும் ஒரு சில நல்ல வானொலிகள் ஆங்காங்கே இருப்பது மட்டுமே அழிந்து கொண்டிருக்கும் வானொலி உலகத்துக்கு ஆறுதலான விஷயம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...