நகைச்சுவையாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபுவுக்கு திடீர் ஏற்றமாக மக்கள் அளித்த பரிசுதான் தனி காமெடியன் என்ற அங்கீகாரம். அஜீத், விஜய் நடிக்கும் படங்களில் கூட யோகிபாபுவின் கால்ஷீட் வேண்டும் என்ற அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் யோகிபாபு இரண்டு மூன்று படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார் அப்படி ஒரு திரைப்படம்தான் ஜாம்பி. திகில் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் யோகிபாபு கதாநாயகன் போன்ற தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கிறார்.
கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் நிறைவு பெறுகிறது. இதில் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்களுடன் முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது. ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது. வேகமாக உருவாகிவரும் ‘ஜாம்பி’ படத்தை படக்குழுவினர் கோடையில் வெளியிடவுள்ளனர். புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்து வருகிறார்.