Entertainment
சரத்குமாரின் புதிய நிலைப்பாடு
ஆரம்பகாலத்தில் திமுகவில் இருந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பின்பு திமுகவில் இருந்து முற்றிலும் விலகினார். அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். பின்பு அதிமுகவோடும் கொண்ட கொள்கை வேறுபாட்டால் தனியாக சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்து தேர்தல்களிலும் போட்டி இட்டார்.

இவரின் அரசியல் நிலைப்பாடுகள் சரி வர அமையாததால் இவரின் கட்சி சரிவை சந்தித்து நிறைய நிர்வாகிகள் விலகி விட்டனர். இருப்பினும் சரத்குமார் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக்கும் தனி வேட்பாளரை நிறுத்துவேன் என அறிவித்தார்.
இந்நிலையில் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிப்பதென்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்து திடீரென அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க தயாராகி விட்டார். நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசிய சரத் இன்று அதிமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கிறார்.
