Entertainment
அந்த படம் வரலேன்னா நான் தற்கொலை பண்ணி இருப்பேன்
இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா ஒரு காலத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்டாக இருந்தவர். இவர் இயக்கியதில் பிள்ளை நிலா மிகப்பெரும் வெற்றிப்படம் ரஜினியை வைத்து இயக்கிய ஊர்க்காவலனும் இவர் கேரியரில் முக்கிய படம்.

முதல் முதலாக இவர் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர்தான் ஆடியோவாக வெளிவந்தது. பிள்ளை நிலா படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் இசைஞானி இளையராஜா இசையமைத்தது. இந்த படத்தில் நடித்த பேபி, ஷாலினி, ராதிகா, மந்திரவாதியாக நடித்த சத்யராஜ் போன்றோரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
படமும் அமானுஷ்யமான திகில் படமாக இயக்கி இருந்தார். இந்த படம் இயக்குவதற்கு முன் மிகவும் கஷ்டப்பட்டாராம் மனோபாலா.
முதல் படமாக ஆகாய கங்கை படத்தை இயக்கியவர் அந்த படம் சரியாக போகவில்லை என்பதால் மிகவும் கவலையில் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தாராம்.
மிகவும் கஷ்டத்தில் இருந்த மனோபாலாவுக்கு தயாரிப்பாளர் கலைமணி பிள்ளை நிலா படம் தயாரித்து கை கொடுக்க , இளையராஜாவும் கை கொடுக்க, நடிகர் மோகனும், மனோபாலா, தான் கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு செய்த உதவியை மறக்காமல் உடனடியாக தனக்கு இருந்த பிஸியான ஷெட்யூலில் மனோபாலாவுக்காக நடித்து கொடுத்தாராம்.
படமும் மிகப்பெரிய ஹிட் அடித்து மனோபாலா வாழ்க்கையில் ஒளி ஏற்றி, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என அவரின் வெற்றிப்படங்களை அதிகப்படுத்தி அவரை தமிழ் சினிமாவில் முன்னிலை படுத்தியதாம்.
