Entertainment
அடுத்த ஓட்டு ரஜினிக்கு- ட்ரெண்டாகும் ஹேஷ் டாக்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட நாட்டை காப்பாற்ற முடியாது என்ற அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப 1996ல் ரஜினி கூறியது, அப்போதைய தமாக, திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி வாய்ப்பை கொட்டி கொடுத்தது.

எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் என 89ல் ராஜாதி ராஜா படத்தில் பாடிய ரஜினி பிற்காலங்களில் அரசியலுக்குள் மேலோட்டமாக வந்தார்.
பின்பு பல படங்களில் தமிழகத்துக்கு ஆதரவான வார்த்தைகள் கொண்ட பாடல்களோடு நடித்தார்.
ரசிகர்களின் தொடர் ஆதரவுக்கேற்பவும் நெருக்கடிகளுக்கு ஏற்பவும் நீண்ட நாட்கள் கோரிக்கை ஏற்று கட்சி தொடங்க முடிவெடுத்த ரஜினி, ரசிகர்களை அழைத்து, கட்சி தொடங்குவதாக மட்டுமே அறிவித்தார்.
அவரது கட்சி இன்னும் தொடங்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டி இடவில்லை யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. மாறாக அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்க இருப்பதாக கூறும் ரஜினியை ஆதரித்து அடுத்த முதல்வர் ரஜினி என்று ஒரு ஹேஷ்டாக் ஒன்று இணையம் முழுவதும் பரவி வருகிறது.
#அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே#அடுத்த_ஓட்டு_தலைவருக்கே
என அந்த ஹேஷ் டேக் பரவி வருகிறது.
