Entertainment
பேஸ்புக் டுவிட்டரில் ஜாதி- உறியடி இயக்குனர் விஜய்குமார்
இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் உறியடி. ஜாதிய பிரச்சினைகளை அலசி இருந்தது. திரைக்கதையும் படமும் நன்றாக இருந்ததால் படம் நன்றாக பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 படத்தை இயக்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை உட்பட சில சமுதாய பிரச்சினைகளையும் புரட்சியையும் பேசியது இப்படம். இருப்பினும் உறியடி அளவுக்கு உறியடி 2 பேசப்படவில்லை.
இந்நிலையில் தனியார் இணைய இதழுக்கு பேட்டி அளித்துள்ள இப்பட இயக்குனரும் நடிகருமான விஜயகுமார்,
ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் என எல்லாவற்றிலும் சாதி உணர்வை கொண்டு வந்துட்டாங்க இளைஞர்களுக்கும், சின்னப்பசங்களுக்கும் விவேகத்தைவிட வேகம் அதிகமாக இருக்கும், எதையாவது செய்யவேண்டும் என்ற வேகம் இருக்கும். அந்தமாதிரியான இளைஞர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, அந்த இளைஞர்களுக்கு இந்த வாக்கு வங்கி அரசியலை சொல்லிக்கொடுக்கணும், அதை என் கடமையாக நினைத்தேன் என கூறியுள்ளார்.
