Connect with us

பெயரில் சிறு மாற்றம் செய்த சார்லி

Entertainment

பெயரில் சிறு மாற்றம் செய்த சார்லி

1982ல் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சார்லி. தமிழில் எல்லா நடிகர்களுடனும் காமெடி வேடத்தில் நடித்து முடித்து விட்டார் சார்லி.

07d95e3a427540f79197ac9dcde612f3

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சொந்த ஊராக கொண்ட சார்லியின் திரையுலக வரலாற்றில், வருஷம் 16, காதலுக்கு மரியாதை,பூவே உனக்காக, வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள் மைல் கல்லான படங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வந்த ஜீவா படத்தில் கூட அற்புதமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார் சார்லி.

வெற்றிகொடி கட்டு படத்தில் சார்லியை நகைச்சுவை வேடத்தில் ரசித்து பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். வெளிநாட்டு வேலைக்கு காசு கொடுத்து ஏமாந்தவராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சார்லி.

சமீபத்தில் வந்த வெள்ளைப்பூக்கள் படத்தில் தனது நீண்ட நாள் காமெடி கூட்டணியான சார்லியுடன் சேர்ந்து விவேக் நடித்துள்ளார்.

இருப்பினும் இது ஒரு சீரியஸான த்ரில்லர் படம் காமெடிக்கு வேலையில்லை என்றாலும் விவேக்குடன் சேர்ந்து சார்லியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அது போல சார்லி சமீபகாலமாக விடிஎன் [ஆங்கிலத்தில்] சார்லி என்று திரையில் தனது பெயர் வருமாறு பார்த்து கொள்கிறார்.

அதாவது வேல்முருகன் தங்கசாமி என தந்தையின் பெயரை சேர்த்து கொண்டிருக்கிறார்

அந்த பெயர் செண்டிமெண்ட்டும் சார்லியின் செகண்ட் இன்னிங்ஸை வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மூலம் ஆரம்பித்து வைத்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top