Connect with us

அட்டகாசமாக களமிறங்கும் அனிருத்

Entertainment

அட்டகாசமாக களமிறங்கும் அனிருத்

3 படத்தின் கொலவெறி பாடலின் மூலம் அறிமுகமானவர் அனிருத். முதல் முறையாக ஒரு தமிழ்ப்பாடல் உலக அளவில் ட்ரெண்டானது என்றால் அது இவர் பாடல்தான். இவர் இசையமைத்த கொலவெறி பாடல் எல்லோருக்கும் தெரிந்த பாடல் ஆனதால் தனுஷயும், இசையமைத்த அனிருத்தையும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அழைத்து பாராட்டினார்.

35df5f2a83cf48f6d7442875e745906b

பல்வேறு படங்களில் அதற்கு பிறகு பணிபுரிந்த அனிருத்தின் இசையை அப்போதைய இளைய தலைமுறை மட்டுமே ரசித்தது. சிலருக்கு மட்டுமே அனிருத்தின் இசை பிடித்து வந்த நிலையில் சமீப காலமாக வரும் படங்களில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் இசையமைத்து வருகிறார் அனிருத்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் சமீபத்திய சீசன் இப்போதுதான் முடிந்தது. புதிய சீசன் வரும் 27 ல் தொடங்குகிறது.

இதில் நடுவராக அனிருத் தொடர்ந்து பங்கேற்கிறார். அதற்கான ப்ரமோவை ஸ்டைலாக ஸ்டார் விஜய் வெளியிட்டுள்ளது. இதில் அனிருத் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top