Entertainment
யோகிபாபுவுக்கு அம்மாவாக ரேகா நடிக்கும் தர்ம பிரபு
யோகிபாபு திரையில் காமெடி செய்து சில வருடங்களில் முன்னணி காமெடி நடிகராகி இப்போது கதையின் நாயகன் ஆகும் அளவுக்கு பல படங்களில் நடித்து வருகிறார். தர்மபிரபு என்ற படத்தில் வித்தியாசமாக எமதர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எமனுக்கு எமன்,அதிசயப்பிறவி, லக்கி மேன் படங்களுக்கு பிறகு தமிழில் வரும் எமலோகம் சம்பந்தப்பட்ட படம் இது.

இந்த வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி வந்ததோ அந்த ரேஞ்சில் காமெடி கலந்து உருவாகிறது.
இப்படத்தில் யோகிபாபுவுடன் கடலோரக்கவிதைகள், ராசாவே உன்னை நம்பி, புரியாத புதிர் , புன்னகை மன்னன்,உள்ளிட்ட எண்பதுகளின் கோல்டன் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ரேகா யோகிபாபுவுக்கு தாயாராக நடித்து வருகிறார்.
எமதர்மனாக யோகிபாபு நடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
