Entertainment
இன்று ரிலீஸ் ஆகிறது தேவராட்டம்
கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் தேவராட்டம் படம் இன்று முதல் திரைக்கு வருகிறது.கெளதம் கார்த்திக் முதன் முறையாக கதாநாயகனுக்கு முழு மாஸ் அந்தஸ்து கொடுத்துள்ள படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

முத்தையா ஜாதி படங்களாக இயக்குகிறார் என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ள நிலையில் நான் ஜாதி படம் இயக்கவில்லை. நான் பார்த்து வளர்ந்த முறைகளைத்தான் இயக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.
கெளதம் கார்த்திக்கின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் அடுத்தடுத்து அவரை ஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தி செல்லும் என எதிர்பார்க்கலாம்.
இப்படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
கொம்பன், மருது என அதிரடி ஆக்சன் ஹிட் கொடுத்த முத்தையாவுக்கு மீண்டும் இது ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் முத்தையாவுடன் இணையும் இரண்டாவது படமாகும்.
