Entertainment
வசூலில் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்
கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம். இந்த படத்தின் பாகங்கள் இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. முந்தைய பாகங்களுக்கு அடுத்தபடியாக அவெஞ்சர்ஸ் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

வசூலில் பல சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இப்படத்தை பார்க்க குழந்தைகள் அதிகம் வருகின்றனர்.
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ திரைப்படம் 11 நாட்களில் வசூலித்த சுமார் 7,000 கோடி ரூபாயை((usd 1 billion)) 5 நாட்களில் ஈட்டி, புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
முதல் வார இறுதியில் இப்படம் சுமார் 8,500 கோடி ரூபாய் ((usd 1.223 billion)) வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், முதல்வார இறுதியில் அதிக வசூல் ஈட்டிய முதல் 3டி படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்தியாவில், 3 நாட்களில் அதிவேகமாக 150 கோடியை வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை படைத்துள்ளதோடு, அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்ற பெருமையையும்,படைத்துள்ளது.
