பொழுதுபோக்கு
உதயநிதி தந்தையை சந்தித்த உதயா
தமிழில் திருநெல்வேலி படத்தில் அறிமுகமானவர் உதயா. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் உதயா பல பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும் சரியான படம் இவருக்கு அமையவில்லை. இவரது சகோதரர் ஏஎல் விஜய் பிரபலமான தமிழ் சினிமா இயக்குனர் ஆவார். இவரது தந்தை அழகப்பன் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இவர் உத்தரவு மஹாராஜா என்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அதுவும் சரியாக போகவில்லை.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை தேடி சென்று நேரில் வாழ்த்தியுள்ளார் உதயா.
