நடிகர் மாதவனின் பிறந்த நாள் இன்று

அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர் நடிகர் மாதவன், வந்த நேரத்தில் அன்றைய பெண் ரசிகைகளின் சாக்லேட் ஃபாயாக கனவு நாயகனாக மாதவன் திகழ்ந்தார். மிகப்பெரும் ரசிகைகள் படையுடன் திகழ்ந்தார்.

8d1fa43e19db45ae341b08f407430724

அலைபாயுதே படத்தை விட இவரை உச்சத்தில் வைத்தது மின்னலே படம்தான் அந்த படத்தின் வெற்றி இவரை பெரிய லெலலில் கொண்டு போனது.ரசிகைகளால் மேடி என செல்லமாக அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து பல படங்களில் அதிரடி வேடங்களில் நடித்தாலும் இவரது சாக்லேட் ஃபாய் அந்தஸ்து இவரை விட்டு போகாததால் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இல்லாமல் இருந்தது.

அந்த ஏக்கத்தை போக்க வந்த படம்தான் ரன் 2002ல் வந்த ரன் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இவரது சிறந்த ஆக்சன் படமாகவும் ப்ளாக்பஸ்டர் படமாகவும் இது விளங்கியது. இப்படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கும் நல்ல பெயரை இப்படம் பெற்றுத்தந்தது.

அதன் பின்னர் பல வித ஆக்சன் படங்களில் நடித்த மாதவன் இப்போது சாக்லேட் பாய் படங்களிலேயே நடிப்பதில்லை தற்போது கூட விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றில் இவர் நடித்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் காணும் இவரை வாழ்த்துவோம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment