Entertainment
லோஸ்லியாவ்வுக்குப் பின்னால் இப்படி ஒரு சோகக்கதையா?
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சண்டை, அழுகை என்று சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட இன்ப துன்பங்களை கூறி வருகின்றனர்.
இதில், ஏற்கனவே ரேஷ்மா, மோகன் வைத்யா, மதுமிதா, வனிதா, அபிராமி, சேரன், சரவணன் ஆகியோர் உள்பட தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்
நேற்றைய நிகழ்ச்சியில், சாண்டி தனது அனுபவத்தை பகிர்ந்தார். அதில், சிறுவனாக இருக்கும் போது, மெரினா பீச்சில் குளிக்க போனேன். அப்போது டிரெஸ் எல்லாவற்றையும் யாரோ எடுத்துட்டு போய்ட்டாங்க. அப்புறம், எப்படியோ அடிச்சு புடிச்சு பஸ்ல வீட்டுக்கு போனா, அங்க அம்மா வழக்கம் போல் கையில அம்மிக்கல்ல கொடுத்து, கல் உப்பு மேல முட்டி போட்டு நிற்க சொன்னாங்க. இனிமேல், போக மாட்டேன் சென்று கூறியதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டேன். பின்னர் மறுபடியும் பீச்சுக்கு சென்றேன் என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து லோஸ்லியா தனது குடும்பம் பற்றி பேசினார், அவரது அக்கா, அம்மா திட்டியதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பா வேலைக்கு சென்றுவிட்டார். அம்மா, நான், அக்கா, தங்கை ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்தோம். அக்கா ஸ்கூல்க்கு போய்ட்டு வந்ததும் அவளை அம்மா ஏதோ கேக்க, கோபத்தில் உச்சகட்டம் சென்ற அவள் தனி அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். மறுநாள் காலையில் எழுந்து கதவை திறக்கமுடியவில்லை. தள்ளிய பின்பே திறந்துவிட்டது. அப்போது அவள் தொட்டில் சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.
அவளது கன்னத்தை தட்டி எழுப்பினேன். அம்மா திட்டுனது தப்பு தான். எழுந்துரு அக்கா என்றெல்லாம் கூப்பிட்டேன். கடைசி வரை அவள் எழுந்திருக்கவே இல்லை. அப்பாவுக்கு தெரியபடுத்தியபோது எனது மகள் அப்படியெல்லாம் செய்யமாட்டாள் என்று அப்பா நம்பவே இல்லை என்று கூறி அழுதார்.
அதனால், லவ் பிரேக் அப், அம்மா அப்பா திட்டுனாங்க, ஃபிரண்ட்ஸ் திட்டுறாங்கனு யாரும் விபரீத முடிவு எடுக்க வேண்டாம். இது அவர்களை சுற்றியுள்ளவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று கூறி அழுதுள்ளார். லொஸ்லியாவிற்குப் பின்னால் இவ்வளவு சோகமா என்று ரசிகர்கள் வேதனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
