Entertainment
தமிழ்ப்பொண்ணு மதுமிதாவை ஓரம் கட்டிய போட்டியாளர்கள்….!!!
நேற்று நடிகர் கமல் ஹாசன் பாத்திமா பாபு மற்றும் லாஸ்லியாவை அழைத்து, பிக் பாஸ் செய்திகளை வாசிக்க கூறுகிறார். ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் அங்கு நடந்த விஷயங்கள் பற்றியும் கூறுகிறார்கள். அவரவர்க்கே உரித்தான ஸ்டைலில் இருவரும் சிறப்பாக செய்திகளை வாசிக்கின்றனர்.
பாத்திமா பாபு வாசித்த செய்தியில், அனைவரைப் பற்றி விவரிக்கையில் கவின் – அபிராமி காதல் பற்றியும், முகின் ராவ் – அபிராமிக்கும் பிறந்த குழந்தையாக ஒரு வாட்டர் பாட்டில் குழந்தையைக் கொண்டிருந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்த விஷயத்தை தமிழ் பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மதுமிதா. இங்கு தமிழ் பொண்ணு என்றெல்லாம் பேசாதே என்று அபிராமி சண்டையிடுகிறார்.

இந்த பிரச்சினை கமலிடம் சொல்லப்படுகிறது. அவர் பிரச்சனை குறித்து கேட்கும்போது, வனிதா தலைவராக இருப்பதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மீரா புகார் கூறுகிறார்.
இவை பாதி முடிந்தநிலையில், ஸ்டோர் ரூமில் இருந்து பரிசுகள் எடுத்துவந்து பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் மனம் கவர்ந்த நபர்களுக்கு கொடுத்து, அதற்கான காரணத்தையும் விளக்குகின்றனர். அதில் பருத்தி வீரன் சரவணன் அதிக பரிசுகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
இதன்பின்னர் மதுமிதாவுடன் பிக் பாஸ் வீட்டினர் சண்டையிடுகின்றனர். அதனை அடுத்து மோகன் வைத்யா வீட்டின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
வாக்குவாதத்தின் முடிவில் மதுமிதா மற்றும் ஷெரின் பெட்டை மாற்ற வேண்டும் என்று அபிராமி கூறுகிறார். ஆனால் அதற்கு மதுமிதா ஒத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக அந்த இடத்தில் லாஸ்லியாவை இடமாற்றம் செய்ய வைக்கின்றனர்.
பின்னர் ஷெரினிடம் மதுமிதா விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்கிறார். இதுவரை சண்டைகளால் அழாத மதுமிதாவையும் கதற வைத்துவிட்டார் பிக்பாஸ்.
