Entertainment
நிஷா- கணேஷ் வெங்கட்ராமனுக்கு அழகான பெண் குழந்தை!
கணேஷ் வெங்கட்ராமன் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர். கிட்டத்தட்ட 200 விளம்பரப் படங்களில் நடித்துள்ளதுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
கணேஷ் வெங்கட்ராமனுக்கும், நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களது காதல் பெற்றோர் சம்மத த்துடன் திருமணத்தில் முடிந்தது.
இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிஷாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை 7.29 மணிக்கு தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிஷாவின் பிறந்தநாளுக்கு மறுநாள், அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று மகிழ்ச்சி பொங்க்க் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த கணேஷ் வெங்கட்ராமன் மனைவியுடன் சேர்ந்து சுற்றுலா சென்று பல புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டபடியே இருந்தார்.
கணேஷ் தமிழில் தற்போது வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர்கள் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமானதைவிட, திருமண வாழ்க்கைக்குப் பின் தனிப்பட்ட ரீதியிலே பிரபலமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
