Entertainment
தினமும் என்னை அழ வைக்கின்றனர்- நடிகை மீரா மிதுன்
5ஆம் நாள் காலையில் பாத்திமா பாபுவிற்கு கார்டன் ஏரியாவில் லாஃப்டோ தெரமி சொல்லிக் கொடுக்க உத்தரவிடப்படுகிறது. அவரும் அதனை அனைவருக்கும் அவர் கற்றுத் தருகிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக டாஸ்க்கை முடித்து விடுகின்றனர். பின்னர் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக வனிதாவிடம் மறக்க முடியாத நாள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு தனது மகன் ஸ்ரீ ஹரி பிறக்கும் நாள் என்று அதனை விளக்கியதுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுகிறார்.
இதையடுத்து கவின் துயரத்தில் தோள் கொடுத்த நபர் குறித்து பேச வேண்டும் என்ற கேள்விக்கு தங்கள் குடும்பத்திற்கு உறவினர்கள் யாரும் உதவி செய்யாமல் தவிர்த்தது பற்றி விளக்கி அழுகிறார்.

தான் நன்றி சொல்ல மறந்த நபர் தனது மாமா என்று கூறியதுடன் அவரது இறப்பு பற்றிப் பேசினார். பின்னர் மீரா மிதுனின் ஆடைக்கு மோகன் வைத்யா கொக்கி போட்டுவிட, இதை வனிதாவிடம் கூறினார்.
இதுகுறித்து மீராவிடம் வனிதா விளக்க முயற்சிக்க, அவர் தனது அப்பா போல என்று பேச்சினை முழுமையாகக் கேட்காமல் சென்றுவிடுகிறார். பின்னர் பாத்திமா பாபுவிடம் வனிதா இதுபற்றி விளக்குகிறார்.
பின்னர் பாத்திரம் கழுவும் விவகாரத்தில் மீராவிற்கு சொல்லப்பட்ட வேலையை, சாண்டியை செய்ய சொல்கிறார்.
பின்னர் வனிதாவும் மீராவும் பாத்திரம் கழுவுதல் பற்றி சண்டையிடுகின்றனர். குரலை உயர்த்தி பேசி தினமும் தன்னை மீராவும் அழ வைப்பதாக கூறிக் கொண்டு, அழுது கொண்டே செல்கிறார்.
அவரைப் பலரும் சமாதானம் செய்கின்றனர். இதுவே ஒரு பெரும் பிரச்சினையாகி விடுகிறது.
