Connect with us

உங்களிடம் கலாச்சாரம் இல்லை- கோபத்தில் மதுமிதா!!

Entertainment

உங்களிடம் கலாச்சாரம் இல்லை- கோபத்தில் மதுமிதா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3, மக்களிடையே பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் 15 போட்டியாளர்களே பங்கு பெற்ற நிலையில், 2வது நாள் மீரா மிதுன் 16வது நபராக வீட்டிற்குள் நுழைந்தார்.

தற்போது 16 போட்டியாளர்களுடன், நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

ஆரம்பத்திலேயே போட்டியாளர்களின் சோகக் கதை தமிழக மக்களிடையே பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. போட்டியாளர்களின் துயரங்களை நினைத்து ரசிகர்கள் மிகவும் வருந்தினர்.

இதுகுறித்து நேற்று நடிகர் கமல் ஹாசன் கூருகையில், உலகமே உங்களை பார்த்து கண் வைத்துவிட்டது என்றும், முதல் வாரத்திலேயே மக்களின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள் என்றும் கூறினார். 

6281528ae72ad4505aabd29ecd3d7416

இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியானது. அதில், நான் தமிழ் பொண்ணு. எங்க வீட்டுல இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று மதுமிதா கோபத்துடன் கூறுகிறார்.

இது ஒரு விளையாட்டு தான். இந்த இடத்தில் போய் தமிழ், தமிழ் பொண்ணு, கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று கமல் ஹாசனிடமே அபிராமி கேட்கிறார். அதற்கு, நானும் தமிழ் பொண்ணு தான். உன்னை விட மூத்த தமிழ் பொண்ணு என்று வனிதா கூறுகிறார். 

இவற்றை எல்லாம் அமைதியாக கமல் ஹாசன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன தான் நடக்கிறது என்று கேட்க, வேண்டாம் சார் என்று வனிதா சொல்கிறார்.

பின்னர் மக்களிடம், எப்படி வீட்டை விட்டு விட்டு வந்தோம். இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள். இவர்கள் கேமரா இருக்கிறது என்பதையே மறந்துவிட்டார்கள் என்று கூறுகிறார். இந்த புரோமா அடுத்த சில நிமிடங்களிலே விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top